Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Agastheeswara Swamy Temple, Koranattu Karuppur Natham, Kumbakonam

அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்- கொரநாட்டு கருப்பூர் நத்தம்


அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்- கொரநாட்டு கருப்பூர் நத்தம்



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் 

இறைவி :ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள்

தல மரம் : மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

thanjavurDistrict_ AgasthiswararTemple_KoranattukaruppurNatham-shivanTemple


Arulmigu Agastheeswara Swamy Temple, Koranattu Karuppur Natham, Kumbakonam | அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்- கொரநாட்டு கருப்பூர் நத்தம் தல வரலாறு

இந்த சிறிய கிராமத்தில் மிக பழமை வாய்ந்த சிவாலயம் உள்ளது. இது 9 ம் நூற்றாண்டில் சுந்தராரல் பாடப்பெற்ற 72வது வைப்புத்தலம் எனப்படுகிறது. . இறைவன் அகஸ்தீஸ்வரர். இறைவி அகிலாண்டேஸ்வரி கிழக்கு நோக்கிய இறைவன் கருவறையும் அருகில் தற்போது கட்டப்பட்ட அம்பிகை சன்னதியும் உள்ளன.

இக்கோயிலை ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளதும், 1926ம் ஆண்டு இந்த கோவில் கல்வெட்டுகளை தொல்பொருள் ஆய்வுத்துறையினர் படியெடுத்த செய்தியையும் கிராம மக்கள் கூறினார். கோவில் தரை மட்டத்திலிருந்து மூன்று அடி பூமிக்குள் புதைந்து இருந்ததால் , அந்த மண்ணை அகற்றினர். அப்போது கருவறையைச் சுற்றி சித்தர்கள் ஈஸ்வரனை வழிபடுவது போல புடைப்பு சிற்பங்கள் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது தெரியவந்தது.

கோயில் முழுவதும் ஆங்காங்கே கல்வெட்டுகள் உள்ளன. நத்தம் கிராமத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இங்குள்ள கல்வெட்டுகளில், திருபுவன சக்கரவர்த்தி ராஜராஜ தேவன் ஆட்சி காலத்தில் தரப்பட்ட நிலக்கொடை, தானங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர்களின் ஆட்சி காலத்தில் முக்கியமானதாக இந்த கோவில் விளங்கியுள்ளது.

இங்குள்ள அர்த்த மண்டபம், அம்பாள் சன்னதி ஆகியவை முற்றிலும் சிதைந்து விட்டது. கோவில் வளாகத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட, 2 அடி வராகி அம்மன், 2 அடி உயரமுள்ள சப்த கன்னிகள் கற்சிலைகள், 5 அடி உயரமுள்ள பெருமாள் சிலை, 3 அடி உயரமுள்ள அம்பாள் சிலை, 3 அடி விநாயகர் சிலை ஆகியவற்றை, கோயில் முன் உள்ள மரத்தடியில் வைத்து ஊர்மக்கள் வழிபட்டு வருகின்றனர்.









திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
கொரநாட்டுகருப்பூர்-நத்தம் ,கும்பகோணம் வட்டம்,
தஞ்சை மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:



ஆலயம் அமைவிடம்:

கும்பகோணம்- சென்னை சாலை பிரியும் ரவுண்டானா பாலக்கரையின் வடக்கில் உள்ளது இந்த ரவுண்டானாவை தாண்டியதும் ஒரு சிறிய சாலை வடக்கில் செல்கிறது அதில் இரண்டு கிமி தூரம் சென்றால் நத்தம் என்ற கிராமம் உள்ளது. கொரநாட்டுகருப்பூரை சேர்ந்த நத்தம் என்பதால் கொரநாட்டு கருப்பூர் நத்தம் எனப்படுகிறது.